புதையல் தோண்ட முயற்சித்த ஐவர் கைது..

tubetamil
0

 புத்தளத்தில்  விளக்கு பற்றி பூஜை செய்து புதையல் தோண்ட முயற்சித்த ஐந்து பேர் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் கருவலகஸ்வெவ நெழும்கம்மான பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டுவதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டபோது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, சந்தேகநபர்கள் விளக்கு ஏற்றி பூஜை செய்த பின்னர் புதையல் எடுப்பதற்கு தோண்டியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி, அலவாங்கு மற்றும் பூஜைக்கு பயன்படுத்திய விளக்கு மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.



கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் ஆகியவை கருவலகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் .

இந்நிலையில், மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர். 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top