தேர்தல் தொடர்பில் 125 முறைப்பாடுகள் செய்பய்பட்டுள்ளதாகத் தெரிவிக்க்பபடுகின்றது.
தேர்தல் சட்ட விதிகளை மீறியமை உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் ஆணைக்குழுவிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களில் நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணைக்குழுவில் நிறுவப்பட்டுள்ள முறைப்பாட்டு பிரிவில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் தொடர்பில் அதிகளவு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.