வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படுகின்ற கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிகள் மோதும் 13வது வடக்கின் நீலங்களின் சமர் இன்று ஆரம்பமாகியது இன்றைய முதல் நாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடியிருந்தனர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி 37.04 பந்துப்பரிமாற்றத்தில் 168 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தனர்.
அணி சார்பாக J-மதுஷன் 38ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.பந்து வீச்சில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி சார்பாக T-கிருசாந்தன், K.கரிசாந்தன் ஆகியோர் தலா மூன்று இலக்குகளை வீழ்த்தியிருந்தனர்.
பதிலுக்கு முதலாவது இனிங்சை ஆரம்பித்த கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி 47.4 பந்து பரிமாற்றத்தில் 141 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்திருந்தனர்.
அணி சார்பாக T.தமிழவன் 46ஓட்டங்களையும்,k.கரிசாந்தன் 45ஓட்டங்களையும் அதிகபட்சமா பெற்றனர்.பந்து வீச்சில் G.கெளசிகன் 08இலக்குகளை வீழ்த்தியிருந்தார்.