நடிகர் விஜய்யின் கடைசி படமாக அமைய இருக்கிறது தளபதி69 படம். தற்போது நடித்து வரும் GOAT படத்தின் பணிகள் முடிந்த பிறகு அந்த படத்தின் வேலையை விஜய் தொடங்குவார் என தெரிகிறது.
இந்த படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் தான் இயக்கப்போகிறார். இந்த படம் பற்றிய எந்த புது அப்டேட்களும் வராத நிலையில், ரசிகர்கள் அதற்காக தான் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தளபதி69 படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை மமிதா பைஜூவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரேமலு படத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனவர் தான் மமிதா என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சமந்தா இணைந்திருப்பதாக தகவல் வந்த நிலையில், இளம் சென்சேஷன் நடிகை இணைந்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் இணையத்தில் தற்போது படுவைரல் ஆகி இருக்கிறது.