Avengers Doomsday திரைப்படத்தில் தனுஷ்.. ஹீரோவா? வில்லனா?!

tubetamil
0

 உலகளவில் அனைவராலும் ரசிக்கப்பட்டு பார்க்கப்படும் படங்களில் ஒன்று Avengers. கடைசியாக வெளிவந்த Avengers: Endgame திரைப்படம் உலகளவில் அதிகம் வசூல் செய்த திரைப்படமாக மாறியது.


இப்படத்தில் கேப்டன் அமெரிக்கா, Iron Man, ஸ்பைடர் Man, வில்லன் தெனோஸ் என Avengers: Endgame திரைப்படத்தை மிரட்டலாக இயக்கி இருந்தனர் Russo brothers.

இதனை தொடர்ந்து சமீபத்தில் Avengers Doomsday எனும் படத்திற்கான அறிவிப்பு வெளிவந்தது. இப்படத்தில் Iron man கதாபாத்திரத்தில் நடித்து நம் அனைவரின் மனதையும் கவர்ந்த Robert Downey Jr. வில்லன் Dr. Doom கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.


இந்த நிலையில், Avengers Doomsday திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தனுஷின் ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.


The grey man எனும் திரைப்படத்தில் Russo brothers உடன் இணைந்து தனுஷ் பணியாற்றி இருந்தார். அப்படத்தின் ப்ரோமோஷனில் கூட தனுஷ் எந்த Avenger கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என பல கேள்விகள் எழுந்தது.

ஆகையால் Russo brothers இயக்கத்தில் உருவாகும் Avengers Doomsday படத்தில் தனுஷ் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top