வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் முதல் தடவையாக பங்கு பற்றிய ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி பாடசாலை மாணவர்கள் வெற்றியை பெற்றுள்ளனர்.
குறித்த போட்டியானது அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.
அந்தவகையில் 20 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் முதலாவது இடத்தையும், 18 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் குறித்த பாடசாலை பெற்றுக் கொண்டுள்ளது.அத்துடன், 100 back stoke நீச்சலில் ஈ.புகழ்கீரன் இரண்டாவது இடத்தையும், 1500 மீட்டர் back stoke நீச்சலில் எல்.கரிகாலன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
இதேவேளை, 20 வயதின் கீழ் பிரிவில் 400 மீட்டர் free style நீச்சலில் எல்.கரிகாலன் மூன்றாவது இடத்தையும், 20 வயதின் கீழ் பிரிவில் 50 மீட்டர் back stoke நீச்சலில் எல்.கரிகாலன் இரண்டாவது இடத்தையும், 4×50 மீட்டர் medley relay நீச்சலில் 20 வயதுப் பிரிவு அணி இரண்டாவது இடத்தையும், 100 மீட்டர் butterfly நீச்சலில் 20 வயதுப் பிரிவில் ஆர்.டிவோகரன் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
மேலும், ஆண்கள் பிரிவில் கலந்து கொண்ட பாடசாலைகளுக்கு இடையிலான போட்டியின் புள்ளி பட்டியலில் குறித்த பாடசாலையானது ஐந்தாம் இடத்தில் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.