நீதிமன்ற தீர்ப்பினால் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்த மனுஷ நாணயக்காரவின் இடத்துக்கு காலி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலலால் பண்டாரிகொடவை நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நிரப்பிய ஹரின் பெர்னாண்டோவுக்கு பதில் யாரை நிரப்புவது என்பது தொடர்பில் கட்சி இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.இது அவசரமான விடயமாக உள்ள போதிலும், இது தொடர்பான உள்ளக விவாதங்கள் இன்னும் நடைபெறவில்லை.
இந்தநிலையில் தேசியப் பட்டியல் தொடர்பில் தேர்தலுக்குப் பின்னரே இறுதி செய்யப்படும் என்றும், அதன்படி தற்போதுள்ள பட்டியலில் இருந்தும் அல்லது அதற்கு வெளியில் இருந்தும் வேட்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சிக்கு உள்ளது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தநாயக்கவின் கூற்றுப்படி நான்கு பெயர்கள் பரிசீலனைக்காக முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்களில் ஹிருணிகா பிரேமச்சந்திரவும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.