இந்தியா, இலங்கையுடனான நீண்டகால நட்புறவையும், பரஸ்பர நன்மை மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான இருதரப்பு பங்காளித்துவத்தை மேம்படுத்தவும் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் உதவியுடன் இந்தியாவின் உயர் ஸ்தானிகரகமும் இலங்கை_ இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்கமும் இணைந்து இலங்கை - இந்திய நட்புறவு வளைவை, 2024 ஆகஸ்ட் 08 அன்று சிறிஜயவர்தனபுர கோட்டே தேசிய சந்தன மரத் தோட்டத்தில் திறந்து வைத்துள்ளன.
இந்தநிகழ்வில் பிரதம அதிதிகளாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா பங்கேற்று, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்ததவுடன் இணைந்து, இலங்கை-இந்திய நட்புறவு வளைவை திறந்துவைத்தார்.அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் உட்பட இலங்கை – இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் அலுவலகப் பொறுப்பாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
சுற்றுச்சூழலுக்கான உறுதியான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், 2024ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியினால் தொடங்கப்பட்ட #Plant4Mother பிர்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரதமர் மோடி. 2024 ஜூன் 5ஆம் திகதியன்று புது தில்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் போதி மரக் கன்றுகளை நாட்டி பிரசாரத்தை ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைவரையும் இந்த இயக்கத்தில் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.