சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ். தமிழ்நாட்டின் கொடைக்கானலில் நடப்பது போன்ற கதை என்பதால் தமிழ் ரசிகர்களும் படத்தை தியேட்டரில் ரசித்தார்கள்.
மேலும் குணா படத்தில் வரும் கண்மணி அன்போடு என்ற பாடலை படத்தில் பயன்படுத்திய விதமும் பேசப்பட்டது.
தனது அனுமதி இல்லாமல் 'கண்மணி அன்போடு' பாடலை பயன்படுத்தி இருக்கிறார்கள் என இளையராஜா மிஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவிடம் இருந்து இளையராஜா 2 கோடி ருபாய் நஷ்டஈடு கேட்டதாகவும் அவர்கள் வந்து நேரில் பேரம் பேசி 60 லட்சம் ரூபாயை இறுதியாக கொடுத்ததாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
இருப்பினும் இதுபற்றி இளையராஜா தரப்போ, மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளரே எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.