உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் யாழில் பொலிஸ் உயிரிழப்பு!

tubetamil
0

 யாழில், உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பதுளையை பிறப்பிடமாக கொண்ட, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேற்று முன்தினம் இரத்த வாந்தி ஏற்பட்டது. இதனால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.இதனையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

ஈரலில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top