வவுனியாவில் ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் மரணம்!

tubetamil
0

 வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்ர் ஒருவர் இன்று (29.08) மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.


வவுனியா, கற்பகபுரம்  பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை தனது நண்பர்களுட்ன் மது விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட இளைஞத் ஒருவர் மீது அங்கு வந்த குழுவொன்று கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.


இதனையடுத்து காயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதன்போது, சிகிச்சை பலனின்றி அவர் இன்று (29.08) மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் யாழ்ப்பாணம், சில்லாலை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான மைந்தன் இருதயராஜா (வயது 36) என்பவராவார்.  

வவுனியா வைத்தியசாலையில் சடலத்தை பார்வையிட்ட மாவட்ட நீதிபதி இது தொடாடபான வாக்குமூலங்களையும் பெற்றிருந்தார். சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top