இலங்கையில் இந்திய கடற்றொழிலாளர் மரணித்த சம்பவத்தை அடுத்து ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள், இறந்த கடற்றொழிலாளர் மலைசாமியின் குடும்பத்தினருடன் இணைந்து, ராமேஸ்வரம் அரச மருத்துவமனை அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இலங்கை கடற்பரப்பில் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்த செய்தி, பரவியதையடுத்து, ராமேஸ்வரம் மற்றும் கடலோர மாவட்டமான ராமநாதபுரத்தின் பிற பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை, அமைதியற்ற சூழ்நிலை நிலவியது
இதற்கிடையில் குறித்த சம்பவத்தின்போது காணாமல்போனதாக கூறப்பட்டுள்ள ராமச்சந்திரன் என்ற கடற்றொழிலாளர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.