கங்குவா படத்தின் ட்ரைலர் ரிலீஸ்!

tubetamil
1 minute read
0


 இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த விஸ்வாசம் படத்தை தொடர்ந்து, தற்போது கங்குவா  படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.


இப்படத்தில் சூர்யா ஏழு வேடங்களில் நடிக்கிறார் என தகவல்கள் வெளியானது. மேலும், இந்த படத்தில் பாபி தியோல், திஷா பதானி, நடராஜன் சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ரவி ராகவேந்திர, மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.


கங்குவா படம் சுமார் ரூ. 300ல் இருந்து ரூ. 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை தயாரிக்கப்பட்ட இந்தியப் படங்களில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படங்களில் ஒன்றாகும்.இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி திரையில் வெளிவர உள்ளது. இந்த நிலையில், பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன் ஒரு பேட்டியில் கங்குவா படத்தின் இயக்குனர் சிவா பிறந்தநாள் அன்று அதாவது ஆகஸ்ட் 12ம் தேதி இந்த படத்தின் ட்ரைலர் வெளிவர உள்ளது என கூறியுள்ளார்.



#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top