11 பில்லியன் ரூபா தேவை...!

tubetamil
0

 எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இலங்கையில் பொது தேர்தல் நடத்தப்பட உள்ளது.

புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அண்மையில் நாடாளுமன்றத்தை கலைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பொது தேர்தல் நடத்துவது தொடர்பில் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

பொதுத்தேர்தலை நடத்த 11 பில்லியன் ரூபா தேவை | To Conduct General Election 11 Billion Rs Needed

இந்த நிலையில் இலங்கையில் பொது தேர்தல் நடத்துவதற்கு 11 பில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ ரத்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலை நடத்த 11 பில்லியன் ரூபா தேவை | To Conduct General Election 11 Billion Rs Needed

தேர்தலுக்கான நிதியை விடுவிக்குமாறு திரைசேரிக்கு உத்தரவிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாவினை அரசாங்கம் ஒதுக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top