2024 ஜனாதிபதி தேர்தல்....!

tubetamil
0

 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு காலம் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 3 மணிவரையிலான நிலவரத்தின்படி, நாடளாவிய ரீதியில் 70 சதவீதத்ததுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ் மாவட்டத்தில் பிற்பகல் 2 மணிவரை 48.95 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது என பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் 72 சதவீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி செயலாளர் நந்தன கலபட குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது வரை 56.34 வீதமான வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது 

வன்னி தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாலை 2.00 மணிவரை 49 ஆயிரத்தி 747 வாக்காளர்கள் வாக்களித்துள்ளார்கள். இது வாக்களிப்பு வீதத்தில் 57.25 வீதமாக காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை தொடக்கம் நண்பகல் 12 மணி வரையில் 23.88 வீதம் வாக்களிப்பு உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி முரளிதரன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் மிகவும் சுமூகமான முறையில் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில் மாலை 3 மணி வரை 59 ஆயிரத்து 730 வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.


இது மொத்த வாக்குகளில் 65.92 வீதமாக காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2024, ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இன்று முற்பகல் 10 மணி நிலவரப்படி பெரும்பாலான மாவட்டங்களில் 20 வீதமாக பதிவாகியுள்ளதாக அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கொழும்பு 20 வீதம், களுத்துறை 32 வீதம், நுவரெலியா 25 வீதம், முல்லைத்தீவு 25 வீதம், வவுனியா 30 வீதம், இரத்தினபுரி 20 வீதம், மன்னார் 29 வீதம், கம்பஹா 25 வீதம், புத்தளம் 23 வீதம், பொலன்னறுவை 35 வீதம் என்ற அளவில் வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது.

2024 ஜனாதிபதி தேர்தல்: நிறைவுக்கு வந்த வாக்களிப்பு நடவடிக்கைகள் | Prez E Ection Province Wise 20 Percentage 

அத்துடன், குருநாகல் 30 வீதம், திகாமடுல்ல 30 வீதம், திருகோணமலை 30 வீதம், மாத்தறை 28 வீதம், கண்டி 20 வீதம் மற்றும் பதுளை 21 வீதம். கேகாலையில் 18 சதவீதம் என்ற அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதேவேளை, மொனராகலை மற்றும் காலியில் 18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மட்டக்களப்பில் 17 வீதமும், யாழ்ப்பாண மாவட்டத்தில் மிக குறைந்த 10 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top