கொழும்பு பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்திசையில் பயணித்த இரு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பலர் பேருந்தில் பயணித்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இச்சம்பவம் வரக்காபொல தும்மலதெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து காரணமாக கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அத்துடன், பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் தலையிட்டு நிலைமையை சீர்செய்வதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.