தம்மை தவறாக கைது செய்து, தடுத்து வைத்ததாக தெரிவித்து பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான புருனோ திவாகர குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதன்போது அவர் தமக்கு 50 மில்லியன் ரூபாய் நட்டையீடு வழங்க வேண்டும் என கோரிக்கையை விடுத்துள்ளார்.
குறித்த வழக்கினை சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த பிரகடனத்தின் அடிப்படையில் அவர் தாக்கல் செய்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு புருனோ திவாகரவை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்திருந்தனர்.
பிரபல யூட்டியூப் தளம் ஒன்றில் வெளியான காணொளி ஒன்றின் அடிப்படையில் புருனோ கைது செய்யப்பட்டிருந்தார்.
நகைச்சுவை கலைஞர் நட்டாஷா எதிரிசூரிய பௌத்த மதத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டார் எனவும் அந்த காணொளி யூட்டியூப் தளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது எனவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும், புருனோ இந்த வழக்கில் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தற்பொழுது குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் 50 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி புருனோ வழக்குத் தொடர்ந்துள்ளார்.