பிக்பாஸ் சீசன் 8கு விஜய் சேதுபதியின் சம்பளம்... அடேங்கப்பா...!

tubetamil
0

விஜய் டிவியில் பிக்பாஸ் 7 சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக திகழ்ந்தது.

7 சீசனை தொகுத்து வழங்கியவர் உலகநாயகன் கமல்ஹாசன். ஆனால் சமீபத்தில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தினாலும் அடுத்து யார் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது என்ற கேள்வி மக்கள் இடையே எழுந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் நேற்று விஜய் டிவியிடம் இருந்து ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.



அதன்படி, பிக்பாஸ் சீசன் 8 - ல் நடிகர் விஜய்சேதுபதி  தான் அடுத்த தொகுப்பாளராக களம் இறங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், இணையத்தில் வலம் வரும் தகவலின் படி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு ரூ. 50 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.120 கோடி வரை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top