9 அரச அதிகாரிகள் நீக்கம்..!

tubetamil
0

அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது அரச அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி எம்.பி.சுமணசேகர தெரிவித்துள்ளார்.

இவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டிலே தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.


9 அதிபர்கள், ஒரு பிரதி அதிபர், நான்கு ஆசிரியர்கள், பொது சுகாதார பரிசோதகர், சமுர்த்தி முகாமையாளர் மற்றும் மூன்று வைத்தியர்கள் உட்பட 19 அரச உத்தியோகத்தர்கள் ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள் என அம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் பிணக்குகளைத் தீர்க்கும் மத்திய நிலையத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 

இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையை அடுத்து 19 அதிகாரிகளில் 9 பேர் தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடமைகளில் இருந்து நீக்கப்பட்டவர்களின் வெற்றிடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளன என்று மாவட்ட தேர்தல் அதிகாரி சுமனசேகர தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top