வெளியாகவுள்ள மற்றுமொரு விசேட சுற்றறிக்கை...!

tubetamil
0

 அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களில் அரச இலச்சினையை, திணைக்களம் அல்லது நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை மீண்டும் நடைமுறைபடுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதன்போது, ​​வாகனங்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கும் வகையில் இவ்வாறு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டு வாகனங்களுக்கு அரச இலச்சினை மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்துவதற்கான சுற்றறிக்கையை பொது நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சீர்திருத்தங்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

வாகனங்களில் அரச இலச்சினை: வெளியாகவுள்ள மற்றுமொரு விசேட சுற்றறிக்கை | State Emblem And Company Name Government Vehicles 

அரச சின்னங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக 1992ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை மீளாய்வு செய்து சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது.

1992 ஆம் ஆண்டின் சுற்றறிக்கை வாகனங்களில் அரச இலச்சினையைப் பயன்படுத்துவது தொடர்பாக மட்டுமே அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.

வாகனங்களில் அரச இலச்சினை: வெளியாகவுள்ள மற்றுமொரு விசேட சுற்றறிக்கை | State Emblem And Company Name Government Vehicles

2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் அந்த அறிவுறுத்தல்கள் முறையாக பின்பற்றப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய, அரச இலச்சினையுடன் அமைச்சு, திணைக்களம் அல்லது நிறுவனத்தின் பெயரும் குறிப்பிடப்பட வேண்டும் என திருத்தப்பட்ட சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top