வாக்களிப்பு நிலையத்தில் குழப்பம் விளைவித்தால் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு நிலையங்களில் யாரேனும் குழப்பம் விளைவிக்க முயற்சித்தால் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு ஆயுதங்கள் வழங்கப்படுவது இவ்வாறான நிலமைகளின் போது பயன்படுத்துவதற்காகவே என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடைபெறும் தினம் மற்றும் அதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கைத் திட்டமொன்று ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு மேலதிகமாக முப்படையினரையும் கடமையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாக்குப் பெட்டிகள் போக்குவரத்து செய்யும் போது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பிற்காக 54000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்