பல இலட்சம் பெறுமதியான போதைப்பொருள்...!

tubetamil
0

 மன்னார்- மாந்தை பகுதியில் 12 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கைது சம்பவமானது நேற்று  மாலை மாந்தை மேற்கு பிரதேசத்தில் உள்ள மூன்றாம் பிட்டி பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார், தள்ளாடி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய பல இலட்சம் பெறுமதியான போதைப்பொருள்! | Man Arrested With 3 Kg Of Drugs

இதன்போது குறித்த நபர் விற்பனைக்காக பொதி செய்யப்பட்ட 3 கிலோ 570 கிராம் கேரள கஞ்சாவுடன் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மற்றும் சான்றுப் பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top