ஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வசதியாக கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் தேர்தல் தினத்தன்று விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை நீண்ட தூர புகையிரத சேவைகள் இடம்பெறும் எனினும் குறுகிய தூர புகையிரதங்களின் எண்ணிக்கையில் சில குறைப்புகள் ஏற்படக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.