தென்னிலங்கையில் இளம் தாய் ஒருவர் கணவனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.களுத்துறை வாதுவ பகுதியில் ஒரு பிள்ளையின் தாயை, கணவர் கோடரியால் தாக்கி நேற்று முன்தினம் கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் அதனை மேற்கொள்ளாமல் சடலம் பாணந்துறை ஆரம்ப வைத்தியசாலையில் இரண்டு நாட்களாக வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஹாசினி ருவன்திலக என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் சகோதரியும் கோடரியால் தாக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஆதரவற்ற நிலையில் இருந்த உயிரிழந்த பெண்ணின் தாய், வாதுவ பொலிஸ் நிலையத்தில் பல மணித்தியாலங்கள் காத்திருந்த பின்னர் நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் வாதுவ பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சமிந்திர குமார கருத்து வெளியிடுகையில்,
நீதவானின் உத்தரவு கிடைத்துள்ளதாகவும் எனினும் பிரேத பரிசோதனை நாளை மறுதினம் நடத்தப்படும் என பாணந்துறை சட்ட வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பாணந்துறை சட்ட வைத்திய அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, பிரேத பரிசோதனையை நாளை மறுதினம் நடத்த தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.