ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவிற்கும் யாழ்.மறை மாவட்ட ஆயரிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது, இன்று காலை யாழ். மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் மற்றும் நாமல் ராஜபக்ச இடையிலே 15 நிமிடங்கள் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதுடன் அது தொடர்பான விடயங்களை நாமல் ராஜபக்ச பின்னர் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இச்சந்திப்பில் நாமல் ராஜபக்ச மற்றும் அவர் தரப்பை சார்ந்தவர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.