ரணிலுடனும், சஜித்துடனும் நிற்கும் இனவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்!

tubetamil
0

ரணிலுடனும், சஜித்துடனும் ஒழிந்து நிற்கும் இனவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும், புதிய அரசியலமைப்பை உருவாக்க உள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 


கிளிநொச்சியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவிவ்தார். குறித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று பகல் 3 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டில் தேர்தல்கள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றது. நீங்களும் பல கட்சிகளுக்கு வாக்களித்து வருகின்றீர்கள். உங்களுடடைய வாக்குகளால் பல அரசுகள் உருவாகியிருக்கின்றன.

ஆனால், அந்த அரசாங்கங்களால் இலங்கையில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. மக்கள் வாறுமைக்குள் தள்ளப்பட்டார்கள். யுத்தம் உருவானது. கல்வி, சுகாதாரம் அழிந்தது.

இத்தனைக்கும் அந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் பிரச்சினைகளை சந்திக்கவில்லை. மாறாக அவர்கள் வளர்ச்சி அடைந்தார்கள். பொருளாதாரத்திலும் முன்னேற்றமடைந்தார்கள்.

அதனால்தான் மாற்றம் தொடர்பில் சிந்திக்க வேண்டி உள்ளது. அவ்வாறான மாற்றத்தை உருவாக்க வேண்டும். விசேடமாக வடக்கில் உள்ள மக்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும், அரசியலில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற சிந்தனை எழுந்துள்ளது.

இன்று ஆட்சி மாற்றம் தொடர்பில் மக்கள் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். இந்த தேர்தலில் மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என மக்கள் சிந்திக்கின்றனர்.

நீங்கள் அறிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், இராணுவத்தினரிடம் கேட்டுப்பாருங்கள். தபால்மூல வாக்களிப்பில் 80 வீதமானவர்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளனர்.

இந்த தேர்தலில் தென்னிலங்கையில் எவ்வாறான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். சிங்கள மக்கள் மத்தியில் மாத்திரமல்ல, வடக்கு மக்களும் அந்த வெற்றியில் எம்முடன் இணைய வேண்டும். 

இதுவரை வந்த அரசுகள் வடக்கு மக்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கவில்லை. முன்னொரு தேர்தலில் இங்குள்ள மக்கள் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். பின்னர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவினை முழுமையாக வழங்கிய போதிலும் அவரால் வெற்றிபெற முடியவில்லை. 

பின்னர் கோட்பாய ராயபக்சவிற்கு எதிராக வாக்களித்தீர்கள் ஆனாலும் அதிலும் அரசாங்கத்தை வெற்றி கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தேசிய மக்கள் சக்திக்கு இம்முறை வாக்களியுங்கள் என்று உங்களிடம் கேட்கின்றோம்.

வடக்கு, கிழக்கு,தெற்கு இன்றி அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் நல்ல அரசாங்கம் ஒன்றை உருவாக்கவுள்ளோம். சீர்கெட்டுள்ள அரசை மீட்க நீங்களும் ஒத்துழைக்க வேண்டம். அதற்காக வேலைத்திட்டங்கள் எம்மிடம் இருக்கின்றது.

நாங்கள் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். அதன் மூலம் அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய வகையில் தீர்வு கிடைக்கும். நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

இவ்வாறான எமது அரசாங்கத்தில் 
குறிப்பிட்ட சில விடயங்களை முன்னெடுக்க உள்ளோம்.
குழந்தைகளுக்கு கல்வி என்பது எமது பிரதான நோக்கமாகும். கிராமப்புற குழந்தைகளுக்கும், பாடசாலைக் கல்வியையும் மேம்படுத்தவுள்ளோம்.

பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைகள், பாடலை வளங்களை சீர் செய்வதுடன்,பெற்றோருக்கு சுமையான கல்வி முறையில் மாற்றத்தினையும் கொண்டு வருவது எமது பிரதான திட்டமாகும்.

கிளிநொச்சி மக்கள் அதிகமாக விவசாயத்தை தம்பி வாழ்கின்றனர். அவர்களின் விவசாயத்தில் அபிவிருத்தியினை கொண்டுவருவதும் எமது அரசின் திட்டமாகும். சிறந்த விதைகளை பெறுவதில் கடினம் ஏற்படுகின்றது.

விதை ஆராய்ச்சி நிலையங்கள், விதை சந்தைகளை உருவாக்குவோம். விவசாயிகளிற்கு விவசாயத்திற்காக காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்.

அத்துடன் இங்குள்ள பிரதான பிரச்சின நீர் வழங்கள் காணப்படுகின்றது. 126 குளத்துக்கு மேல் அபிவிருத்தி செய்யப்படாமல் இருப்பதாக விவசாயி எனக்கு தெரிவிக்கின்றார். 400 குளங்கள் வரை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றார். ஒரு வருத்திற்குள் அனைத்துக் குளங்களும் சீர் செய்து கொடுக்கப்படும்.

விவசாய உரம், மருந்துகள் உள்ளிட்டவை சலுகை விலையில் பெற்றுக்கொடுக்கப்படும். அத்துடன் விவசாய உற்பத்திகளுக்கு சிறந்த நியாயமான விலை பெற்றுக்கொடுக்கப்படும்.

இன்று எமது நாட்டு மக்கள் பெரும் பிரச்சினையாக எதிர்கொள்வது போதைப் பொருள் பாவனையாகும். போதைப் பொருட்களை அரசியல்வாதிகளே வினியோகிக்கின்றனர்.
கெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுவதில்லை.

போதைபெ்பொருட்கள் வெளிநாடுகளிருந்து இறக்கப்படுகின்றது. அவ்வாறான போதைப்பொருள் வினியோகத்தில் ஈடுபடுவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம். அரசு அமைக்கப்பட்ட பின் விரைவில் போதையிலிருந்து எமது நாடு விடுவிக்கப்படும்.


இதேவேளை எமது நாட்டில் நீதி சமபடுத்தப்படும். மொழி, மதம், இனத்தின அடிப்படையில் நீதி நடைமுறைப்படுத்தப்படாது. அனைத்து இனம், மதம்,சமயங்களையும் சமமாக மதி்கும் வகையில் நீதி நிலைநிறுத்தப்படும்.

இன்று எமது நாட்டில் உள்ள மக்கள் வறுமையில் உள்ளமைக்கு அரசியல்வாதிகளின் களவும், திருட்டுக்களுமே காரணம். அவ்வாறு மக்களன் பணங்களையும், பொது சொத்துக்களையும் திருடியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம். அவர்களிடமிருந்து திருடப்பட்ட மக்களின் சொத்துக்களை பறிப்போம்.

திருட்டு, மோசடி இல்லாத அரசாக தேசிய மக்கள் சக்தி மட்டுமே இருக்கும். எமது அரசாங்கத்தில் அவ்வாறானவர்கள் மட்டுமே இருப்பார்கள். 

வறுமையில் உள்ள மக்களுக்கு10,000 ரூபா வழங்குவோம். விரைவில் மின்கட்டணம் குறைக்கப்படும். உணவு, மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கு வரி இல்லாது செய்யபபடும். அதனால் ஏழை மக்களின் வாழ்வில் மறு மலர்ச்சி உருவாகும்.

எமது நாடு, எந்த பக்கமிருந்து பார்த்தாலும் பெறுமதியான நாடாக இருக்கின்றது. அதனை இதுவரை வந்த அரசுகள் அழித்தனர். தெற்கு பகுதியிலிருந்து தேசிய மக்கள் சக்தி தொடர்பில் செய்திகள் வருகின்றதா?

அடுத்த 2 வாரமும் எதிர்காலத்தை தீர்மானிக்கும் காலங்களாகும். பழைய பாதையிலிருந்து விலகி புதிய பாதைக்குள் செல்வோம். இங்குள்ள மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்று இதுவரை தீர்மானிக்கவில்லை. ஆகவே சிந்தித்து செயற்பட வேண்டும்.

இதுவரை காலமும் இவாதம் பேசி இனவாத அரசாங்கமே முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறு இனவாதம் பேசியவர்கள் இன்று எங்கு இருக்கின்றார்கள் தெரியுமா? 

மொட்டுக் கட்சியே அதிகம் இனவாதம் பேசியது. அந்த மொட்டுக்கட்சியில் இருந்தவர்கள் இன்று ரணிலுடனும், சஜித்துடனும் நிற்கின்றார்கள். ராயபக்சவின் இனவாதம் இன்று சிறிதாகிவிட்டது

11 வருடங்கள் ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்த பீரிஸ் கோட்டாவின் அரசியல் 2 வருடம் இருந்தார்.இன்று சஜித்துடன் நிற்கின்றார். மொட்டின் மறு அவதாரம் சஜித். மொட்டுடன் இருந்த பலரும் சஜித்துடன் நிற்கின்றார்கள்.

இவ்வாறு இரண்டு அவதாரங்களாக ரணிலுடனும், சஜித்துடனும் ஒழிந்து நிற்கின்றார்கள். அவர்களை நாங்கள் பக்கத்திலும் எடுக்க மாட்டோம். மஞ்சள் நீராடினாலும் அவர்கள் செய்தவை அழிந்துவிடுமா?

இங்குள்ள மக்கள் இனவாதிகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் இன்றைய தினம் தனது உரையில் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top