ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அரசியல் கூட்டணிக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் தலதா அதுகோரல தலைமை தாங்கவுள்ளார்.
அதன் ஊடாக அவர் குறித்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படவுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக தலதா அதுகோரல ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகித்தார்.
எனினும், கடைசி சில நாட்களுக்கு முன்னதாக ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்துவத்தில் இருந்து விலகி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்து ஐக்கிய தேசியக் கட்சியில் அவர் இணைந்தார்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தேர்தல் அரசியல் செயற்பாடுகளில் இருந்தும் ஒதுங்கியிருக்கத் தீர்மானித்துள்ளார்.
இவ்வாறிருக்க, தலதா அதுகோரல கட்சியின் முக்கிய தலைவராக முன்னிறுத்தப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.