மாமன் மருமகனுக்கு இடையில் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆபத்தான நிலையில் மருமகன் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மாமன் மருமகனுக்கு இடையில் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக பாரிய இரும்பினால் தாக்கப்பட்டதில் மருமகன் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு திங்கட்கிழமை பெரியகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கிளிநொச்சி கல்மடு பகுதியைச் சேர்ந்த பூபாலசிங்கம் ஐங்கரன் என்னும் 32 வயதுடைய இளைஞனே படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.