அநுரகுமாரவின் வாக்கு எண்ணிக்கை அதிகரிப்பு…!

tubetamil
0

 தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவின் வாக்கு எண்ணிக்கை ஏனைய வேட்பாளர்களை விட பாரிய வித்தியாசத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.

அதன் பிரகாரம் தற்போதைக்கு வரை வெளியான சில மாவட்டங்களின் தபால் மூல வாக்குகள் மற்றும் காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை, யாழ்ப்பாணத்தின் நல்லூர் உள்ளிட்ட தேர்தல் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் அநுரகுமார திசாநாயக்க 415,254 வாக்குகளைப் பெற்றுள்ளார்.அவர் பெற்றுக் கொண்ட வாக்குகளின் வீதம் 52.5 வீதமாகும்.

தற்போதைய நிலவரப்படி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச, 167,387 வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் அவரது வாக்கு வீதம் 21.2 வீதமாகும்.


இதுவரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் மூன்றாம் இடம் வகிக்கும் ரணில் விக்ரமசிங்க, தற்போதைக்கு 151,659 வாக்குகளைப் பெற்று 19.2 வீத வாக்கு வீதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

நான்காவது இடத்தைப் பிடித்துள்ள தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 1வீத வாக்கு வீதத்துடன், 24,7053யும் பெற்றுக் கொண்டுள்ளார். 

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்குகள் எண்ணிக்கை வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இருக்கின்றார்.

தற்போதைக்கு வெளியான 11இற்கும் மேற்பட்ட மாவட்ட  தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அவர் பத்து மாவட்டங்களின் தபால் மூல வாக்குகளில் முன்னிலை வகிக்கின்றார். மொத்தமாக 154, 657 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ள அநுரகுமாரவின் வாக்கு வீதம் 57.8 ஆகும்.

ரணில் விக்ரமசிங்க எந்தவொரு மாவட்டத்தையும் இதுவரை வெற்றி கொள்ளவில்லை.

அநுரகுமாரவின் வாக்கு எண்ணிக்கை அதிகரிப்பு! வாக்குவீதம் வீழ்ச்சி | 90 Percent Votes For Anurav In Postal Ballots

எனினும், 52,482 வாக்குகளைப் பெற்று 19.6வீத வாக்குகளுடன் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் இருக்கின்றார்.

தபால் மூல வாக்குகளின் எண்ணிக்கை வெளியான 11 மாவட்டங்களில் வன்னி மாவட்டத்தை மட்டும் வெற்றி கொண்டுள்ள சஜித் பிரேமதாச, 48,970 வாக்குகளைப் பெற்று 18.3 வீத வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கின்றார்.

நாமல் ராஜபக்ச 4821 வாக்குகளை மட்டுமே பெற்று 1.8 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் இருக்கின்றார். ஐந்தாம் இடத்தில் திலித் ஜயவீர  1940 வாக்குகள் (0.7வீதம்), ஆறாம் இடத்தில் 1691 (0.6வீதம்) வாக்குகள் பெற்றுள்ளனர். 

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்குகள் அடிப்படையில் தற்போதைக்கு அநுரகுமார திசாநாயக்க சுமார் 60 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதுவரை வெளியான காலி, திருகோணமலை, மொனராகலை, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அளிக்கப்பட்டிருந்த தபால் மூல வாக்குகளில் 90 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க பெற்றுக் கொண்டுள்ளார்.

அவர் பெற்றுக் கொண்டுள்ள 90,857 வாக்குகள் எண்ணப்பட்டுள்ள மொத்த தபால் வாக்குகளில் 60. 21வீதம் ஆகும்.

அதனையடுத்து சஜித் பிரேமதாச இரண்டாம் இடத்தில் இருக்கின்றார். அவர் பெற்றுக் கொண்டுள்ள 27,800 வாக்குகள் இதுவரை எண்ணப்பட்டுள்ள தபால் மூல வாக்குகளில் 18.42 வீதம் ஆகும்.

இதுவரை எண்ணப்பட்டுள்ள தபால் மூல வாக்குகளில் 26,162 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க, 17.34 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச இது வரை அளிக்கப்பட்டுள்ள வாக்குகளில் 1.7 வீதம் மட்டுமே பெற்றுக் கொண்டுள்ளார். தற்போதைக்கு வரை அவர் மொத்தமாக 2969 வாக்குகளை மட்டும் பெற்றுக் கொண்டுள்ளார். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top