தேர்தல் பிரசாரக்களம் தீவிரமாகியுள்ள நிலையில், அரசியல் பிரசாரங்களில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவது குறித்து தேர்தல் கண்காணிப்பாளர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
இந்த செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு, ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறு ஏனைய கண்காணிப்பாளர்களும், அரசியல் கட்சிகளிடம் கோரியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் சமன் சிறி ரத்நாயக்க, இது தொடர்பில் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.