ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் ஒருவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த தகவல்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு குற்ற புலனாய்வு பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார்.இம்முறை ஜனாதிபதி தேர்தலில்போட்டியிடும் பிரதான வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்பட்ட திட்டம் தொடர்பில் இரகசியமான அறிக்கையொன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நீதவானிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை இரகசியமாக பேணுமாறு நீதிமன்றம் மேலும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பிலான தகவல்களை குற்ற புலனாய்வுப் பிரிவிற்கு வழங்கிய நபரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்த விசாரணை குறித்து அறிவிக்குமாறு நீதவான் திலின கமகே, குற்ற விசாரணைப் பிரிவிற்கு அறிவித்துள்ளார்.