முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் தேர்தலில் நிற்கமாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எதிர்கால அரசியல் சக்திகளுக்கும் தலைமைத்துவத்தை வழங்குவார் என விஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ருவான் விஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியலிலிருந்தும் நாடாளுமன்றத்திற்கு வரமாட்டாரா என ஊடகவியலாளர் ஒருவர் வினவிய கேள்விக்கு பதிலளித்த ருவான் விஜயவர்தன, தேசிய பட்டியலிலிருந்தும் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வரமாட்டார் என கூறியுள்ளார்.
இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி பதவியை வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர்கள் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்வதற்காக மீண்டும் நாடாளுமன்றம் செல்லும் பாரம்பரியம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.