தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அங்கத்தவரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியருமான கந்தப்பு கிரிதரன் மீது நேற்றிரவு கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கத்திக்குத்துக்கு இலக்காகிய கந்தப்பு கிரிதரனை மீட்ட அயலவர் பருத்திதுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்திருந்த நிலையில் அவசர கிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போதன் றி தற்போது சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
குறித்த நபர் சுமார் முப்பது வருடங்களுக்கு மேலாகந
கரவெட்டி இராஜகிராமத்தில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளார். வாடகைக்கு கொடுத்தவர் வெளிநாட்டில் வசித்து வருவகின்றார். அவர் இலங்கைக்கு வந்து செல்கின்ற போது வாடகை கொடுத்து வசிக்கும் கந்தப்பு கிரிதரனிடம் இந்த வீடு விற்பனை செய்ய உள்ளேன் என தெரிவித்துள்ளார். அப்போது வாடகை வீட்டில் வசிக்கும் கந்தப்பு கிரிதரன் வீடு விற்பனை செய்வதாக இருந்தால் தனக்கு தருமாறு கோரியுள்ளார்.
அதற்கு வீட்டின் உரிமையாளரும் ஒத்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவ் வீட்டினை வெளிநாட்டில் வசிக்கும் பிறிதொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் வீட்டை கொள்வனவு செய்தவர்கள் வீட்டை விட்டு வெளியேறுமாறு கந்தப்பு கிரிதரனை கேட்டுள்ளார்.
அதற்க்கு கிரிதரன் வேறு வீடு பார்த்து செல்வதற்க்கு சிறிது கால அவகாசம் கோரியுள்ளார்.
அதற்க்கு வீட்டை கொள்வனவு செய்தவர் கால அவகாசம் வழங்கமுடியாது என்று மறுத்துள்ளார். இதனால் வீட்டை கொள்வனவு செய்தவர் பொலீசாரை பயன்படுத்தி கிரிதரனது சொத்துக்களை தூக்கி வெளியில் வீசியுள்ளதாக. கிரிதரன் தெரிவித்துள்ளார்.
பின்னர் வீதியில் வீசப்பட்ட சொத்துக்களை தவிர்ந்த மேலதிக உடமைகள் வீட்டிற்க்கு இருந்துள்ளன. இதனை எடுப்பதற்க்காக வீட்டிற்க்குள் சென்ற கிரிதரனை மின் விளக்குகளை அணைத்துவிட்டு தாக்கியதுடன் கத்தியாலும் குத்தியுள்ளனர்.
ஏற்கனவே விபத்து ஒன்றில் காலை இழந்த கிரிதரன் வயிற்றில் பலத்த காயமடைந்துள்ளார்.