தப்பிச் செல்ல முயன்ற குடும்பம் கைது....!!!

tubetamil
0

 கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு குடும்பம் இரண்டு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலியான ஆவணங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டினை பயன்படுத்தி இத்தாலி செல்ல முற்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.



சிரியாவை சேர்ந்த 7 பேர் கொண்ட இரண்டு குடும்ப உறுப்பினர்களே குடிவரவு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை நோக்கி செல்லவிருந்த AI -282 விமானத்தில் பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது அவர்களின் கடவுச்சீட்டுகளில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து அதிகாரிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தினர். அவை போலியான முறையில் தயாரிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் கடவுச்சீட்டுக்கள் துருக்கியிலுள்ள நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு தலா 2000 அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளது.


ஸ்கேனர் டெஸ்ட், எலெக்ட்ரானிக் கேட்ஸ் போன்ற அதி நவீன சோதனைகளில் சிக்க முடியாத வகையில் உயர் தொழில்நுட்ப சிப்களை பயன்படுத்தி இந்த கடவுச்சீட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top