இந்த ஆண்டு ஐசிசி மகளிர் இருபதுக்கு20 உலகக் கிண்ண 2024க்கான அணிகள் டுபாய்க்கு செல்ல தொடங்கியுள்ளன.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒக்டோபர் மாதம் 10 அணிகள் பங்கேற்கும் உலகக் கிண்ண போட்டிகள் நடைபெறவுள்ளன.
அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் ஏ பிரிவில் போட்டிகளில் பங்கேற்கவுள்ளன.
பங்களாதேஸ், இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் பி பிரிவில் களம் இறங்கவுள்ளன.
இந்தப் போட்டிகள் ஒக்டோபர் 3ஆம் திகதி முதல் ஒக்டோபர் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.