தமது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் குறிப்பிடத்தக்க சதி நடந்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினரான நலிந்த ஜயதிஸ்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்காருக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு குறித்த சமூக ஊடகப்பதிவுகளை அவர் இதற்காக சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்புவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியின் அடிப்படையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கட்சி நிதிக்காக வாகன அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டை ஜயதிஸ்ஸ மறுத்துள்ளார்.அத்துடன், கட்சியை குறைமதிப்புக்கு உட்படுத்தும் போட்டிக் கட்சிகளின் பரந்த அரசியல் மூலோபாயத்தின் ஒரு பகுதியே இது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
2005 ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தியில் இருந்து 83 மாகாணசபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட போது 83 அனுமதிகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது.
எனினும் 2 அனுமதிகளை மாத்திரம் பெற்று எஞ்சிய 81 அனுமதிப்பத்திரங்களும் அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்கப்பட்டன.