தென்னிலங்கையில் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக ஐந்து பேர் காயமடைந்த நிலையில், பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹிக்கடுவ பகுதியில் காணி தகராறு காரணமாக மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது. இரண்டு பிரிவாக பிரிந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
அதற்கமைய ஒரு தரப்பில் உள்ள இரு சகோதரர்களும் மற்றைய தரப்பில் தாய் தந்தை மற்றும் மகன் ஆகியோரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.