இலங்கை அணி , இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் நிலைக்கு முன்னேறியுள்ளது.
லண்டன் ஓவலில் நடைபெறும் இந்தப்போட்டியின் நேற்றைய மூன்றாம் நாள் நிறைவின்போது, இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 94 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதன்படி போட்டியில் வெற்றி பெறுவதற்கு 9 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்கும் நிலையில் 125 ஓட்டங்களை மாத்திரமே பெறவேண்டிய நிலையில் உள்ளது.
எனவே மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடரில், இங்கிலாந்து அணியின் வெள்ளையடிப்பில் இருந்து இலங்கை அணி இன்றைய நான்காம் நாளில் தப்பித்து, வெற்றியை உறுதிச்செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தபோட்டியில் இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 325 ஓட்டங்களையும் இரண்டாம் இன்னிங்ஸில் 156 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் 263 ஓட்டங்;களை பெற்றநிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 94 ஓட்டங்களை பெற்றிருந்தது.
பத்தும் நிசங்க ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.