உலக சாதனையில் இடம்பிடித்துள் மாணவி....!

tubetamil
0

 யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் பயிலும் மாணவியான மாதங்கி கனகசுந்தரம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

வேகமாக அதிக எண்ணிக்கையான பாதணிகளை அடுக்குதல் என்னும் தலைப்பின் கீழான போட்டியிலேயே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இணையத்தளம் ஊடாக விண்ணப்பித்து 10 பாதணிகளை ஒன்றன் மேல் ஒன்றாக 59 செக்கன்களில் அடுக்கி முடித்தே குறித்த சாதனையை அவர் புரிந்துள்ளார்.

கடந்த மே மாதம் 20ஆம் திகதி கொடிகாமத்தில் வீட்டில் இரு சாட்சிகள் முன்னிலையில் கின்னஸ் உலக சாதனை சட்டதிட்டங்களுக்கு அமைவாக குறித்த சாதனை நிகழ்வு காணொளியாக பதிவு செய்யப்பட்டு இணையத்தினுடாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

மூன்று மாதங்களின் பின் உலக கின்னஸ் மதிப்பீட்டுக் குழுவழனால் guiness assesment  இதன் உண்மைத்தன்மை ஆராயப்பட்டு ஓகஸ்ட் 28ஆம் திகதி அன்று இந்நிகழ்வு கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் குறித்த மாணவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, கின்னஸ் சாதனை படைத்த இந்த மாணவியை அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரடியாக அழைத்து சாதனை சான்றிதழைப் பார்வையிட்டு பாராட்டியுள்ளார்.

அதேவேளை, இந்த கின்னஸ் சாதனைக்கான விண்ணப்பம் முதல் அனைத்து விடயங்களையும் குறித்த மாணவியே தனது சுய முயற்சியில் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top