லண்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக பெற்ற டெஸ்ட் வெற்றியைத் தொடர்ந்து ஆறு வீரர்கள், ஐசிசி ஆடவர் டெஸ்ட் தரவரிசையில் புதிய உயர் தரவரிசைகளைப் பெற்றுள்ளனர்.
இலங்கை அணி 10 ஆண்டுகளுக்குப் பின்னர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றியீட்டியது.
அந்த அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணியில், அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் மற்றும் ஆரம்ப ஆட்டக்காரர் பத்தும் நிசங்க ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தநிலையில் தனஞ்சய டி சில்வா, டெஸ்ட் தரவரிசையில் ஒட்டுமொத்தமாக 13 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் மெண்டிஸ் மற்றும் நிசங்க ஆகியோரும் புதிய தரவரிசைகளை பெற்றுள்ளனர்.
இதில் மெண்டிஸ், ஒட்டுமொத்தமாக 19 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்
டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில், விஸ்வ பெர்னாண்டோ 31 வது இடத்திற்கு முன்னேறி முன்னணியில் உள்ளார். லஹிரு குமார 32வது இடத்துக்கும் மிலன் ரத்நாயக்க 84வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.