பதிவாளர் நாயகம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளார் என்று இலங்கையின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
எனவே மனுதாரர்களுக்கு 3.3 மில்லியன் ரூபாய்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திணைக்களத்தில்; பணிபுரியும் உதவிப் பதிவாளர்களின் பதவி உயர்வு தேர்வை காலவரையின்றி ஒத்திவைத்ததன் மூலம் அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அரச அதிகாரிகள் சரியான நேரத்தில் தீர்மானங்களை எடுக்கத் தவறுவது மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் மற்றும் அரச சேவையின் செயல்திறனைக் குறைக்கும் என்று உயர்நீதிமன்றம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் அகில இலங்கை உதவிப் பதிவாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி.எம்.எஸ்.திஸாநாயக்க மற்றும் 132 உதவிப் பதிவாளர்களுடன் இணைந்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.