எதிர்வரும் 21ஆம் திகதி நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது.
பிரதான வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் போட்டி நிலை அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், வேட்பாளராக களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாசவுக்கு தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளமை தமிழர் அரசியல் பரப்பில் சலசலப்பை தோற்றுவித்துள்ளது.
இதேவேளை, சஜித் பிரேமதாசவுக்கு, சுமந்திரன் இந்தியாவின் வேண்டுதலின் பேரில் ஆதரவு வழங்குகின்றார் என்ற கருத்து ஒன்று நிலவுவதாக அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.