ஊரடங்கு சட்ட தளர்வு தொடர்பான அறிவிப்பு...!

tubetamil
0

 நாடளாவிய ரீதியில் நேற்று இரவு 10 மணி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று(22) காலையுடன் தளர்த்திக் கொள்ளப்படவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

நாட்டில் அமைதியற்ற சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு இல்லையெனில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது பற்றி அரச மேல்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்ட தளர்வு தொடர்பான அறிவிப்பு | Curfew Implemented In Sri Lanka

அதன் பிரகாரம் காலை ஆறுமணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்திக் கொள்ளப்பட்டு, அதன் பின்னர் தேவையேற்படின் இன்று(22) மாலை தொடக்கம் மீண்டும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று தெரியவந்துள்ளது.

இன்று மாலை ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டால் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவம் மிக எளிமையான முறையில் நடைபெறும் என்றும் எதிர்வு கூறப்படுகின்றது. 

நாடளாவிய ரீதியில் இன்று இரவு 10 மணியில் இருந்து நாளை காலை 06 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே தேவையேற்பட்டால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் த ரப்பின் முக்கிய அதிகாரிகளுக்கு இடையில் இன்று மாலை நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அதன் பிரகாரம் தேர்தல் முடிவுகள் மொத்தமாக வெளியானதன் பின்னர் தேவையேற்பட்டால் மாத்திரம் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் ஞாயிறு மாலை தொடக்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை முதற்கட்டமாக ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சாத்தியம் இருப்பதாக மேலதிக தகவல்களில் இருந்து தெரிய வந்துள்ளது. 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top