வீட்டு வேலைக்குச் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!

tubetamil
0

 பிரித்தானியாவில், தங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் வேலைக்கு வந்த இளம்பெண்ணை, சூனியக்காரி என்று கூறி கொலை செய்து எரித்த தம்பதியினர் கைது செய்யப்பட்டார்கள்.

இந்நிலையில், அந்த இளம்பெண்ணின் கடைசி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.


பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் சோபி. லண்டனில் Sabrina Kouider மற்றும் Ouissem Medouni என்னும் தம்பதியினரின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்கு சேர்ந்தார்.

ஆனால், சோபி தனது முன்னாள் காதலனான மார்க் என்பவருடன் மந்திர சக்தி உதவியால் தொடர்பிலிருப்பதாகவும், அவருக்காக வேவு பார்ப்பதற்காக வந்திருப்பதாகவும் குற்றம் சுமத்தி அவரை அந்த தம்பதியினர் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

அடி உதையால் சோபியின் மார்பெலும்பு, விலா எலும்புகள் மற்றும் தாடை எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது.

சரியாக உணவு கொடுக்காமல், அடித்து, உதைத்து, பாலியல் வன்கொடுமை செய்து விடுவதாக மிரட்டி அந்தப் பெண்ணை சித்திரவதை செய்துள்ளனர்.

ஒரு நாள் சொல்வதற்கு நாவு கூசும் அளவிற்கு கொடுமைகள் புரிந்த பின், சோபியைக் கொன்று, தோட்டத்தில் வைத்து தீயிட்டு கொளுத்தியுள்ளனர் அந்த தம்பதியர்.


பக்கத்து வீட்டில் உள்ள ஒரு பெண் பிணம் எரியும் வாடை அடிப்பது கண்டு பொலிசாருக்கு தகவல் அளித்திருக்கிறார். பொலிசார் வந்து பார்க்கும்போது எரிந்துபோன நிலைமையில் இருந்த எலும்புகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன.

Sabrina மற்றும் Ouissem ஆகிய இருவரையும் கைது செய்த பொலிசார் அவர்களை சிறையில் அடைத்தனர். இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சோபியைக் கொல்வதற்குமுன் அந்த ஈவிரக்கமில்லாத தம்பதி தங்கள் மொபைல் போனில் அவரை எடுத்த வீடியோக்கள் விசாரணைக்கு உதவியாக எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்நிலையில், சரியாக உணவளிக்கப்படாததால், எலும்பும் தோலுமாக காணப்படும் சோபியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதுவே அவர் கொல்லப்படும் முன் கடைசியாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

Sabrina மற்றும் Ouissem தம்பதிக்கு தண்டனை வழங்கப்பட்டும், அது சோபியின் பெற்றோருக்கு எவ்வித ஆறுதலையும் அளிக்கவில்லை.

அவர்கள் செய்ததை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ள சோபியின் தாய் கேத்தரின், அவர்கள் ஒரு குடும்பத்தையே அழித்துவிட்டார்கள், என மகளை கொடுமைப்படுத்தியுள்ளார்கள், என் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்கிறார்.




Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top