வாழ்வாதாரப் பாதிக்கப்பு தொடர்பான விவசாயிகளின் முறைப்பாட்டக்கு மனித உரிமை ஆணைக்குழு முக்கிய அதிகாரிகளுக்கு அழைப்பு

tubetamil
0

 


தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டமை தொடர்பாக விவசாயிகளின் முறைப்பாட்டக்கு மனித உரிமை ஆணைக்குழு முக்கிய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த அழைப்புக் கடிதம் யாழ்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அனுப்பப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள கமநல அபிவிருத்தி உத்தியோகஸ்தர், கிளிநொச்சி கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ஆகியோரை  உள்ளடக்கி குறித்த கடிதம் கடந்த 02.09.2024 அன்று அனுப்பப்பட்டுள்ளது.

HRC/KIL/028/2024 இலக்கத்தில் முரசுமோட்டை கமக்காரர் அமைப்புப் பகுதியினரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைக்கு சமூகமளிக்குமாறு குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி இலக்க முரசுமோட்டை சுமக்காரர் அமைப்பினைச் சேர்ந்த விவசாயிகள் சிலரினால்
இரணைமடு நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 2024ம் வருட சிறுபோக நெற்செய்கைக்காக பணங்கள் அறவீடு செய்யப்பட்டிருந்தும், குறிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மட்டும் பயிற்செய்கை நிலம் காட்டப்படாமல் பயிர் செய்ய இயலாத நிலையை ஏற்படுத்தியதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, பொருளாதார ரீதி
பாதிக்கப்படுவதாக தெரிவித்து விவசாயிகளால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு தொடர்பில்
விசாரணைக்காக எதிர்வரும் 10.09.2024 (செவ்வாய்கிழமை) அன்று மு.ப.10.00 மணிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்திற்கு (இல. 42, கோவில்
யாழ்ப்பாணம்)
சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


குறித்த விசாரணையில் சகல
ஆவணங்களுடன் ஆணைக்குழு
முன்னிலை கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் எனவும், தங்களது அறிக்கைக்காக தொடர்பில்
முறைப்பாட்டாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரநிவாதத்தின் பிரதி நங்களின் தகவலுக்காக இத்து
இணைக்கப்பட்டுள்ளது எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இரணைமடு நீர் பாசன செய்கையில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் விவசாயிகளால் தொடர்ச்சியாக முறைப்பாடுகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், முரசுமோட்டை விவசாயிகளால் பல்வேறு தரப்பினருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இவ்வாறு விசாரணைக்கு அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top