கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொஹுவல, சரனங்கர வீதியிலுள்ள கடையொன்றுக்குள் புகுந்து, நேற்று இரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
43 வயதுடைய கடையின் உரிமையாளரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸாருக்கு கிடைத்த செய்தியின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. கொலையாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.