கனடாவில் நாடு தழுவிய அடிப்படையிலான பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பெண் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய பெண் ஒருவரே இவ்வாறு தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்டேஸி டென்வேய், என்ற 36 வயதான பெண் ஒருவரை பொலிஸார் தேடி வருவதோடு, இந்த பெண் தொடர்பான புகைப்படமொன்றையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
குறித்த பெண் இந்த மாத ஆரம்பத்தில் ரொறன்ரோவில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், 37 வயது ட்ரிஸ்டோன் மெக்னெலி என்ற நபரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.