தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி மூன்று மணித்தியாலங்களிற்குள் 35 தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.
அதன்படி தேர்தல் சட்டங்களிற்கு மாறான பிரச்சாரங்கள் மற்றும் வாக்காளர்கள் மீது செல்வாக்கு செலுத்த முயலும் நடவடிக்கைகள் பதிவாகியுள்ளதாக பவ்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் ஒரு தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானவர்கள் வாக்குச்சாவடிகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.