நாட்டை தம்மால் மட்டுமே கட்டி எழுப்ப முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.குளியபிட்டி பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் இப்பொழுது மிகவும் தெளிவான தீர்மானம் ஒன்று எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது எனவும் அவர், சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க ஜோடிக்கு வாக்களிப்பதா அல்லது நாட்டை கட்டி எழுப்பும் ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெறச் செய்வதா என்பதே இந்த தீர்மானமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானம் மிகவும் தெளிவானது என அவர் தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து நல்லதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இன, மத, ஜாதி மற்றும் வகுப்பு பேதங்களை களைந்து நாட்டை கட்டி எழுப்புவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.