எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் பிரசாரத்தின் போது வேறொரு வேட்பாளரை விளம்பரப்படுத்துவது சட்டவிரோதமானது என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
திர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் தமது சொந்த வெற்றிக்காக மாத்திரம் பிரசாரம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.
தேர்தல் சட்டங்களை மீறி சில வேட்பாளர்கள் தமது போட்டியாளர்களை ஆதரிப்பதாக அல்லது ஊக்குவிப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.